நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக வீதியில் கடுவெல – பியகம இடைமாற்றத்தின் கடவத்தை வரையான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரிப்பதன் காரணமாக இந்த இடமாற்றப் பாதை முற்றாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடுவெலயிலிருந்து மாத்தறை நோக்கி வாகனங்கள் உட்செல்லவும் வெளியேறவும் முடியாத நிலை காணப்படுகின்றது.
அதேவேளை தெற்கு அதிவேக வீதியில் வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த வெலிபென்ன இடைமாறும் பகுதி மீண்டும்திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.