மஹரகம நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவரை கொலை செய்ய முயன்றவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாக சந்தேகநபர் மற்றுமொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதையடுத்து, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சந்தேக நபரினை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என்பதோடு குறித்த நபரிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் கூரிய ஆயுதம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கத்திக்குத்துக்கு இலக்கான நபர், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 2