Saturday, July 25, 2026
No menu items!

போதை மாத்திரைகள்

யாழில் போதை மாத்திரைகளுடன் மாணவர்கள் கைது!

யாழ்ப்பாண மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் மற்றும் யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர், போதை மாத்திரைகள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிமாவட்ட பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரையும் பொலிஸார் தடுத்து விசாரணை நடத்தினர். சோதனை மேற்கொள்ளும்...

கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 1.3 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத போதை மாத்திரைகள்!

கல்பிட்டியில் கடற்படையினரால் மூன்று  படகுகள் மற்றும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய சட்டவிரோத போதை மாத்திரைகள் நேற்று (15) கைப்பற்றப்பட்டுள்ளன என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்கள விசேட பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்தது. கைது செய்யப்பட்டவர்கள்...

போதை மாத்திரைகள் விற்பனைக்காக வந்த கொழும்பு இளைஞர் யாழில் கைது – இரகசிய தகவலில் செயல்பட்ட புலனாய்வுப் பிரிவு!

யாழ்ப்பாணத்தில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் செயல்படும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற்று வந்த வேளையில், சந்தேகநபர் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயற்சித்ததாக...

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று இரவு முன்னெடுக்கப்பட்டது. 19 வயதான குறித்த சந்தேக நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகளும் 465 கிராம் கஞ்சா கலந்த மாவாவும் மீட்கப்பட்டது. மேலதிக...

1.8 மில்லியன் போதை மாத்திரைகள் மீட்பு!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.8 மில்லியன் Pregabalin (PREGAB 150mg) மாத்திரைகளை இலங்கை  கைப்பற்றியுள்ளனர். பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒலிபெருக்கி பெட்டிகளில் குறித்த கையிருப்பு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் இலட்சகணக்கான போதை மாத்திரைகள் மீட்பு…!

புத்தளம், கற்பிட்டி, முசல்பிட்டி பிரதேசத்தில் கடந்த 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 442,680 போதை மாத்திரைகள் அடங்கிய 18 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர் ஆவார். சந்தேக...

மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகம் செய்தவர் கைது…!

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பொரளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரே கைது...

நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது…!

நீண்டகாலமாக ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின், கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (06.10) கைதுசெய்துள்ளனர். நொச்சியாகம, ரம்பாவெவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரும் அனுராதபுரம் திஸ்ஸவெவ வீதியில் வசிக்கும் 45 வயதுடையவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நபரிடமிருந்து 60 கிராம் ஐஸ் போதைப்பொருள், 830 மில்லிகிராம் ஹெரோயின்,...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…!

பதுளை பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை, உடுவர பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 831 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, சந்தேக நபர்...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img