ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர்களும் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அண்மையில் ஒன்றுகூடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பு கடந்த 27 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இந்தக் கலந்துரையாடலில்,
தற்போதைய அரசியல் நிலைமை,நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெறவுள்ள பேரணி, அத்துடன் மாகாண சபைத் தேர்தல் சாத்தியம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண, வீரகுமார திஸாநாயக்க, அசங்க நவரத்ன, சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.

சந்திப்பு முடிவில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here