ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்படும் அல்லது ஆதரவு வழங்கப்படும் வேட்பாளர் மஹிந்த சிந்தனையுடன் இணங்கி அதன் கொள்கைகளுடன் செயற்படும் ஒருவராக இருப்பது அவசியம் என அகில இலங்கை செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றைய தினம் (24.06) விஜயராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தித்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் பின்னர் கருத்துரைத்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன, இன்னும் கட்சியின் வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் கட்சியின் வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மற்றும் உரிய நேரத்தில் வேட்பாளர் தொடர்பான தீர்மானத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெளியிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.