மாலைத்தீவு கடற்பரப்பில் இஸ்ரேலுக்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மாலைத்தீவின் வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்பிலேயே இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த எண்ணெய் கப்பல்கள் பப் அல் மன்டாப் நீரிணை மற்றும் செங்கடலை கடந்து பயணிக்க திட்டமிட்டிருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பப் அல் மன்டாப் நீரிணையிலிருந்து 2000 கிலோமீற்றர் தொலைவில் இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
மீண்டும் தாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக கப்பல்கள் தங்களுடைய பயணப்பாதைகளை மாற்றியுள்ளன.