மின்னேரியா நகருக்கு அருகிலுள்ள யோத வாவியில் விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்ததாக கூறப்படும் பெண்ணின் அடையாளம் குறித்து எதுவும் கண்டறியப்படவில்லையெனவும் அங்குள்ள மக்கள் அனைவரும் குறித்த பெண் ஒரு பிச்சைக்காரியென்றும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
மின்னேரியா நகருக்கு அருகிலுள்ள யோத வாவியில் தவறி விழுந்து, இரண்டு கிலோமீற்றர் தூரம் அடித்து செல்லப்பட்ட சந்தர்ப்பத்திலேயே மின்னேரியா பொலிஸ் உயிர்காக்கும் படையினரால் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கும் போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.