January 12, 2026
மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள்
News News Line Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள்

Nov 29, 2023

வாள் மற்றும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என்பன பதிக்கப்பட்ட பீரங்கி உட்பட 6 கலைப்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இன்று (29) அதிகாலை 05.05 மணி அளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-554 மூலம் ஜேர்மன், பிராங்பேர்ட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தொல்பொருட்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரினால் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் இக்கலைப்பொருட்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

1756 ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால் கண்டி அரச மாளிகையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பொருட்களே இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த கலைப்பொருட்களில் கிர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னரின் திருமண வாள், பீரங்கி மற்றும் 2 பெரிய துப்பாக்கிகள் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர இங்கிலாந்து உட்பட சுமார் 20 வெளிநாடுகளில் இலங்கையில் இருந்து திருடப்பட்ட தொல்பொருட்கள் பெருமளவு இருப்பதுடன், இந்தப் பொருட்களும் எதிர்காலத்தில் இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *