இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் உடலுறுப்புகள் அந்நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.

ஷமில பெர்னாண்டோ என்ற 35 வயதுடைய நபரின் உடல் உறுப்புகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் அனுமதியுடனேயே அவரது உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

அதற்கமைய, அவரின் இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் ஆகியன இவ்வாறு தானம் செய்யப்பட்டுள்ளன.

இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியதாகவும், இரண்டு சகோதரர்கள் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிவதாகவும் தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here