பாதுகாவலரால் தள்ளிவிடப்பட்ட முதியவரை நடிகர் நாகர்ஜுனா மீண்டும் சந்தித்துள்ளார்.
நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தானா இணைந்து நடிக்கும் குபேரா படத்தில் நடிகர் நாகர்ஜூனா சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “கூலி” படத்திலும் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படி பிஸியாக இருக்கும் நாகர்ஜூனா குறித்த காணொளியொன்று வெளியாகியுள்ளது.
அதாவது, குபேரா படப்பிடிப்பிற்காக சென்றுக் கொண்டிருக்கும் வேளையில் முதியவர் ஒருவர் நாகர்ஜூனாவை தொட முயற்சி செய்கிறார்.
அப்போது அவர் பக்கத்தில் இருந்த உதவியாளர் உடனே முதியவரை பலமாக இழுத்து கீழே தள்ளியுள்ளார்.
உதவியாளர் இப்படி நடந்து கொள்வதை நாகர்ஜூனா கவனிக்கவில்லை என்றாலும் பின்னால் வந்து கொண்டிருந்த தனுஷ் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
இந்த காணொளிதற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் உதவியாளரின் செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.