Tamil News Channel

முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரருக்கு எதிரான வழக்கு..!

முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்  A.H.M.பௌஸிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (29) தீர்மானித்துள்ளது.

நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவணைக்குப்  பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு  ஒரு மில்லியன் ரூபாவுக்கும்  அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதிவாதி  பௌஸி  நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர் சுகயீனமடைந்துள்ளதால் இன்று நீதிமன்றத்துக்கு வரவில்லை என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி  தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts