முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் சரித ரத்வத்தே நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கைது!
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் பிரதமரின் முன்னாள் மூத்த ஆலோசகருமான சரித ரத்வத்தே, நிதி முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில், சரித ரத்வத்தே மூத்த ஆலோசகராகப் பணியாற்றியிருந்தார்.
ஊடகமொன்று வெளியிட்ட தகவலின்படி, 2015ஆம் ஆண்டு நிலையான கொள்முதல் நடைமுறைகளை மீறி 50 தற்காலிக கிடங்குகளை வாங்கியமை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.
குறித்த தற்காலிக கிடங்குகள் இலங்கை அரசு வர்த்தக கூட்டுத்தாபனம் (STC) மூலம் ரூ. 90 மில்லியனுக்கும் அதிகமான செலவில் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்ததாவது,
குறித்த கொள்முதல் நடவடிக்கையில் நிதி ஒழுங்கு மீறல் மற்றும் சட்டவிரோத ஒப்பந்தங்கள் தொடர்பான சந்தேகங்கள் நிலவுவதாகவும், விசாரணைகள் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()