Saturday, November 21, 2026
No menu items!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு

முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் சரித ரத்வத்தே நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கைது!

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் பிரதமரின் முன்னாள் மூத்த ஆலோசகருமான சரித ரத்வத்தே, நிதி முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில், சரித ரத்வத்தே மூத்த ஆலோசகராகப் பணியாற்றியிருந்தார். ஊடகமொன்று வெளியிட்ட தகவலின்படி, 2015ஆம் ஆண்டு நிலையான கொள்முதல் நடைமுறைகளை மீறி...

இலஞ்சம் பெற்ற அரச அதிகாரி கைது!

அரசாங்க காணியின் ஒரு பகுதியை பயிர்செய்கைக்காக வழங்குவதற்காக 1.2 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்ற குற்றச்சாட்டின் பேரில், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவர் நேற்று (16) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். மஹவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த கைது நடைபெற்றது. விசாரணைகளில், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு பயிரிடப்பட்ட...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (29) அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிபதியின் உத்தரவின்படி, ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை விளக்கமறியலில்...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய உத்தரவு!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராக பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை பிறப்பித்துள்ளது. ராஜித சேனாரத்ன வாக்குமூலம் அளிப்பதைத் தவிர்த்து விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு, கொழும்பு மேலதிக நீதவான் பசன்...

97 மில்லியன் ரூபாய் நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஆறுபேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகிய ஆறுபேர் மீது, 97 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இன்று (ஜூலை 17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது !

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (4) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். 2015 ஜனாதிபதி தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சோள விதைகள் விநியோகித்த சம்பவம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக வாக்குமூலம் அளிக்க வந்த அவர், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.

மெர்வின் சில்வா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மீது கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது . 800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளியிடப்படாத நிதி மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகள் ; விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகளின் பட்டியலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் பெயர்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியல்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்..!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். "ஊழல் குற்றத்தைச் செய்ததாக" இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு...

முன்னாள் உலர் வலய அபிவிருத்தி அமைச்சர் மீது வழக்கு தாக்கல்..!

சந்திராணி பண்டார உலர் வலய அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில், நெருங்கியவருக்கு உரிய நடைமுறைகளுக்குப் புறம்பாக பதவிகளில் நியமித்ததாகக் கூறி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img