November 17, 2025
யாழ் தென்மராட்சியில் பாரிய விபத்து: ஒருவர் பலி..! 
Top Updates புதிய செய்திகள்

யாழ் தென்மராட்சியில் பாரிய விபத்து: ஒருவர் பலி..! 

May 1, 2024

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரமும் ஹயஸ் ரக வாகனமும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்  ஏ9 வீதியின் நுணாவில் பகுதியில் இன்று (01) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் பயணித்த ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த சிறுமி மற்றும் இரு சக்கர உழவு இயந்திர சாரதி ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த நபரே படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளிநாட்டவர்களை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வாகன சாரதி முன்னே பயணித்துக் கொண்டிருந்த இரு சக்கர உழவு இயந்திரத்தின் பின்னால் சென்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விபத்துத் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *