Tamil News Channel

யாழ் நகர் நவீன பொது மலசலகூட தொகுதியை துரிதமாக நிர்மாணிக்க துறைசார் தரப்பினதுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!..

யாழ் நகர்ப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூட தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான திட்டவரைபுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு தினமும் வரும் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் அவசர அவசிய தேவைகருதி நகரப்பகுதியில் நவீன வசதிகளை கொண்ட பொது மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன் வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமையவே இன்றையதினம் குறித்த திட்டவரைபுகளை இறுதிசெய்யும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் குறித்த மலசல கூட தொகுதியை அமைப்பதற்கான திட்டவரைபுகள் இறுதி செய்யப்பட்டதுடன் குறித்த திட்டத்தை துரிதமாக முன்னெடுக்குமாறும் அமைச்சத் துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த திட்டமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டமிடல்களை அடுத்து விரைவில் நிமாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலின் பொது யாழ் மாநகர ஆணையாளர் , பொறியியலாளர்கள் அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இச் செய்தியினை எமது பிராந்திய செய்தியாளர் எமக்கு வழங்கியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts