வற் வரி அதிகரிப்பு தனக்கும் மக்களுக்கும் சிரமமாக உள்ளதாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச நேற்று (17) தெரிவித்துள்ளார்.
களுத்துறை கூட்டுறவு கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மக்கள் படும் சிரமங்கள் குறித்து தற்போதைய அதிபருக்கு தெரியப்படுத்தப்படும் எனவும்
“பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் தேர்தல்களுக்கு சிறந்த முறையில் முகங்கொடுக்க முடியும் எனவும் சவால்கள் ஒரு பிரச்சனையல்ல எனவும் தெரிவித்தார்.
மேலும், அதிபர் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் முன்வைக்கப்படுவார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் தற்பெருமை காட்டினால் அது பலிக்காது” எனவும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.