மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்க்கு விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்டிருந்த ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரிசங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் மட்டக்களப்பில் நேற்று (07) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அங்கு பௌத்த தேரர் உட்பட இருவர் வலம்புரிசங்கு ஒன்றை விற்பனைக்காக கடத்தி வந்ததை அவதானித்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் ஒரு கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here