வவுனியாவிற்கு நேற்று (05 ) வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தை வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இவ் வேளையில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்ட வேளையில் ஆர்ப்பாட்டகாரருக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா மற்றும் மீரா ஜாஸ்மின் சார்ல்ஸ்நையஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை கைதுசெய்யப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு இன்றையதினம் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.