தனது மகள் குறித்து சூர்யா- ஜோதிகா பகிர்ந்த குட் நியூஸ் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சூர்யா- ஜோதிகா
தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திர தம்பதிகளில் ஒருவராக இருப்பவர்கள் தான் சூர்யா- ஜோதிகா.
இவர்கள், கடந்த 2007 ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நாயகியாக வலம் வந்த ஜோதிகா, காதலுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கைக்குள் சென்றார். தற்போது சூர்யா- ஜோதிகா தம்பதிகளுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.
திருமண வாழ்க்கை
திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு என்ட் கார்ட் போட்ட ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தமிழ் சினிமா பற்றி மோசமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பை பெற்றார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாள படங்களிலும் நடித்து வரும் ஜோதிகா தற்போது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். அதே சமயம், தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருக்கும் சூர்யா நடிப்பில் கடைசியாக “ரெட்ரோ” திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றது.
தியாவின் அடுத்தக்கட்டம்
இந்த நிலையில் தனது மகள் தியா மும்பையில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்துள்ள மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், தியாவுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.