நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொரகொட பொலிஸ் பிரிவில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த சிறுவன் நேற்று வெள்ளிக்கிழமை (30/05/2025) மாலை ஏரியில் நீந்தச் சென்றிருந்தபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்தநிலையில், குறித்த சிறுவனை மீட்டு மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மொரகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை மொரோந்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 10 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மொரகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








