மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்த திருகோணமலை, மன்னார் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் உட்பட ஒன்பது பேர் சட்டவிரோதமாக நாட்டுப்படகில் நேற்று மாலை புறப்பட்டு இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே கரை சேர்ந்தனர்.

இவர்கள் குறித்து தகவல் அறிந்த நெடுந்தீவு பொலிஸார் அவர்களை தனியார் ஒருவரின் வீட்டில் தங்கவைத்தனர்.

இவர்களுக்கு நெடுந்தீவு மருத்துவமனை அரசு மருத்துவமனையில் முதலுதவி மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

நடுக்கடலில் உள்ள இருநாட்டு கடற்படைகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாட்டுப்படகில் இலங்கைத் தமிழர்கள் தப்பி சென்ற சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here