மக்கள் எங்களை நம்பாததால் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிட்டது.

அதேபோன்று தற்போதும் ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும் மீண்டும் சில மாதங்களில் நாட்டை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவே முன்வரவேண்டி வரும். அதனால் மக்கள் பிழையான தீர்மானம் எடுத்தால் பங்களாதேஷுக்கு ஏற்பட்டுள்ள நிலையே எமக்கும் ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் எச்சரித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று  (28.08 ) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமான தலைவரை தெரிவு செய்வதா? அல்லது புதிய ஒருவரை தெரிவுசெய்து பரீட்சித்துப்பார்ப்பதா? என்பது  மக்களின் தீர்மானத்திலேயே இருக்கிறது.

ஆனால் மக்கள் அன்று எங்களை நம்பவில்லை. அதேபோன்றே எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும். அதில் எந்த சநதேகமும் இல்லை.

தற்போது மாலைதீவிலும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நாடுகளின் சரியான தலைமைத்துவம் இல்லாமையே இதற்கு காரணமாகும்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் ஒரு தவணை அதிகாரம் கிடைத்தால் பொருளாதார பிரச்சினைக்கு முழுமையான தீர்வை பெற்றுத்தருவார். தற்போது நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வரும்போது இதனைவிட மக்கள் எதை எதிர்பார்க்கின்றனர்? அதனால் மக்கள் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here