நடிகர் அஜித்குமார் இப்போது புதுமையாக பெராரி ரேஸ் கார் அருகே இருந்து புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித் தென்னிந்தியா திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். ஆனால் இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழ் பெற்றுள்ளது.
இவரது திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இன்றும் உள்ளது.ரசிகர்கள் மத்தியில் இவர் தல என்று அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் உலகளவில் பிரபலமான ஒரு எஃப் 1 ரேஸர் (F1 Racer) மற்றும் ஒரு பொறியாளராக புகழ் பெற்றுள்ளார்.

இவர் மிகப்பெரிய கார் பிரியராவார். இதன் காரணமாகவே பல விதவிதமான கார்களுக்கு சொந்நமானவர் அஜித்குமார்.தற்போது டுபாயில் இவர் ஒரு காருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த கார் ஃபெராரி SF90 Stradale என்ற கார் வகையாகும். இதன் எஞ்சின் 780 பிஎஸ் பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.இது ஒரு பிளக்-இன் ஹைப்ரிட் என்பதால், SF90 மூன்று மின்சார மோட்டார்களைப் பெறுகிறது.
மின்சார மோட்டார்கள் 220 பிஎஸ் உற்பத்தி செய்கிறது. இதில் 1,000 பிஎஸ் மற்றும் 800 என்எம் பீக் டார்க்கை உருவாக்குகிறது. இந்த எஞ்சின் 8-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதை பின்நோக்கி நகர்த்த வேண்டும் என்றால் முன்பக்கத்தில் உள்ள மின்சார மோட்டார்களில் ஒன்றைப் பயன்படுத்துகிறது. ஃபெராரி SF90 Stradale 7.9 kWh பேட்டரியைப் பயன்படுத்துகிறது, இது 26 கிமீ வரம்பை வழங்குகிறது.இந்த கார் இந்திய விலையில் சுமார் 7.90 கோடியில் இருந்து தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.









