பொதுவாக எல்லோரும் அடர்த்தியான கூந்தலைப் பெற விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு உங்கள் தலைமுடிக்கு சரியான கவனிப்பும் அக்கறையும் தேவை. எண்ணெய் சிகிச்சை என்பது கவனிப்பில் ஒரு சிறந்த தீர்வாகும். ஹாட் ஆயில் தெரபி முடியை முன்னெப்போதும் இல்லாத வகையில் பளபளப்பாக்கும். ஆனால் முடி சற்று உதிரும்.

அதனால் சூடான எண்ணெயை  முடியில் பிரயோகிக்க கூடாது. தலைமுடி ஈரமாக இருக்கும் போதும் ஆயில் அப்பளை பண்ணக்கூடாது.

  1. தலைக்கு எண்ணெய் வைப்பது முதல் ஷாம்பூ பயன்படுத்துவது வரை பல பொதுவான முடி பராமரிப்பு நடைமுறைகள் உள்ளன. இவற்றில் செய்யும் சிறு தவறுகளால் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படலாம். அதனால் அவற்றை கவனமாக செய்து வந்தாலே போதும் முடிக் கொட்டுவதை தவிர்க்கலாம்.
  2. முடிக்கு சூடான எண்ணெய்யை எப்போதும் பயன்படுத்த கூடாது. இவற்றை பயன்படுத்தினால் முடியில் பொடுகு பிரச்சனை வரும். அதுமட்டுமல்லாமல் தலையில் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே முடி சேதமடையாமல் இருக்க சூடான எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  3. தலைக்கு குளித்து விட்டு ஈரமான முடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது இல்லை. ஈரமான முடியில் கை வைத்தாலே, பலருக்கும் முடி உதிர்வு ஏற்படும். எனவே ஈரமான முடியில் எண்ணெய் வைப்பதை தவிர்ப்பது நல்லது.
  4. தலைக்கு எண்ணெய் வைத்திருக்கும்போது முடியை இறுக்கமாக கட்டி கிளிப் அல்லது கொண்டை போன்றவற்றை போடக்கூடாது. இதனால் முடி உதிர்வு அல்லது ஒரு சிலருக்கு தலைவலி ஏற்படும். முடிக்கு எண்ணெய் வைக்கும் போது முடிந்தவரை அப்படியே விடுவது நல்லதாக இருக்கும்.
  5. கண்டிப்பாக இரவு தூங்கும் முன்பு முடிக்கு எண்ணெய் வைக்க வேண்டாம். இதன் காரணமாக முகப்பரு, கண்களில் எரிச்சல் போன்றவை ஏற்படலாம். எனவே ஷாம்பு போடுவதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பு தலைமுடிக்கு எண்ணெய் வைக்கலாம். அதுபோலவே காலையிலேயே தலையில் எண்ணெய் வைத்துவிட்டு நீண்ட நேரம் அப்படியே விட்டுவிடக்கூடாது. அப்படியே தலைக்கு குளிக்க பிளான் இல்லை என்றால் கொஞ்சமாக எண்ணெய் வைத்தாலே போதுமானது.
  6. முடிக்கு அதிகமாக எண்ணெய் தடவக் கூடாது. அதிகமாக தடவும் போது அழுக்கு படிந்து, முடியை க்ரீஸ் போல மாற்றுகிறது. உச்சந்தலை மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு சிறிது அளவு எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. எனவே, முடிக்கு எண்ணெய் வைக்கும் போது குறைந்த அளவில் வைப்பதை நினைவில் கொள்ளவும். அப்படி அதிகமாக வைத்தால் 2 அல்லது 3 மணிநேரம் கழித்து தலைக்கு குளித்து விடுவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here