மக்களுக்காக முழுமையாக சேவையாற்றக்கூடிய தரப்பினருக்கு மாத்திரமே ஜக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் போது பதவிகள் வழங்கப்படும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் 27 அரசியல் கட்சிகள் நேற்று ஜக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மனிதாபிமானத்துக்கு முன்னுரிமையளித்து செயற்படும் அரசாங்கமே தற்போது அவசியமாகவுள்ளது.

முழு சுமையும் நாட்டிலுள்ள சாதாரண மக்களின் மீது சுமத்தும்  வகையில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உலக நாடுகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் முழுமையான சுமையும் சாதாரண பொது மக்கள் மீது வைக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஆணையைப் பெறக்கூடிய கட்சி எது என்பதை சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே அறிந்து  வைத்துள்ளதாகவும் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசப் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here