2025 ஆம் ஆண்டிற்கான 500,000வது சுற்றுலாப் பயணியை இலங்கை பெப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் வரவேற்றதாக சுற்றுலாத் துறை துணை அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் 03 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று துணை அமைச்சர் ஒரு காணொளி செய்தியில் தெரிவித்தார்.

பெப்ரவரி மாத இறுதிக்குள் 500,000 சுற்றுலாப் பயணிகளை வரவேற்க முடிந்திருப்பது, ஆண்டு இலக்கை அடைவதற்கான நம்பிக்கையை அளித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையை ஒரு சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இந்த மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை துணை அமைச்சர் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கை அடைவதில் சுற்றுலா அமைச்சகம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று ருவான் சமிந்த ரணசிங்க மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here