ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 208 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இது வரை 4, 945 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதில் 1,515 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 3,429 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
இந்தக் காலப்பகுதியில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 34 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இதுவரையில் தங்களது கிடைக்கப்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 4,304 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.








