மத்திய கிழக்கில் உள்ள முக்கிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகளை ஏர் பிரான்ஸ் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஏர் பிரான்ஸ் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இதன் படி, இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் லெபனானின் பெய்ரூட்  ஆகிய நகரங்களுக்கிடையிலான விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசங்களின் நிலைமைகள் கண்காணிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பினால் லெபானான் முழுவதிலும் ஹிஸ்புல்லாக்களை இலக்காக கொண்டு பேஜர் வெடிப்பு தாக்குதல் ஒன்று நடத்தப்பபட்டது.

அதில், 9 பேர் உயிரிழந்ததுடன் 2000 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதன் காரணமாக லெபனானின் செயற்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு பதிலடி நிச்சயம் என அறிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here