நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

2024ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 858 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 46,385 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 19,927 ஆகும்.

இந்நிலையில், கொழும்பு மாவட்டத்திலிருந்து 11,685 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here