கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி கிலோ ஒன்றை 230 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வணிக, உணவு பாதுகப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அரிசியின் விலை சந்தையில் அதிகரித்துள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் பதிலளித்த அமைச்சர்,

”எதிர்வரும் நாட்களில் அரிசி ஒரு கிலோவை  230 ரூபாய்க்கும் குறைவாக சதோசயில் பெற்றுக்கொள்ளலாம்.  சிவப்பு அரிசி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.

தம்புள்ளை, கொழும்பு கோட்டை, பதுளை, மாத்தறை, காலி மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் அதிக விலையில் அரிசி விற்பனை செய்தவர்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதுடன், அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரிசி பற்றாக்குறையே விலை அதிகரிப்பிற்கான காரணம். விவசாயத்திற்குத் தேவையான உரங்களை வழங்கி அரசாங்கம் தொடர்ந்து விவசாயிகளுக்கு உதவியளிக்கிறது.” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here