அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றத்தை தவிர்த்து வரும் அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) இவ்வாறு பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்று டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு தகவல்களை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here