மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (22)சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மதியம் 2.00 மணிக்கு பின்னர் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும் என கூறப்படுகிறது.

இதேவேளை வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதேவேளை, கொழும்பு மற்றும் காலி ஊடாக நீர்கொழும்பு முதல் மாத்தறை வரையிலான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். காற்று தென்மேற்கு திசையில் வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ ஆக காணப்படும்.

மன்னார் ஊடாக கல்பிட்டி முதல் காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலுமான கடற்பரப்புகளில் அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கலாம்.

மன்னார் ஊடாக கல்பிட்டி முதல் காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலுமான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here