ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) பஹ்ரைனில் உள்ள அமேசோன் நிறுவனத்தின் தரவு உட்கட்டமைப்பை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது. இது, ஈரான் மீது சமீபத்தில் அமெரிக்கா நடத்திய இராணுவ தாக்குதல்களுக்கு பதிலடி என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் அரசுடன் தொடர்புடைய ஊடகங்களில் வெளியான அறிக்கையில், ஈரான் படையின் கப்பல் ஏவுகணைகள் பஹ்ரைனில் உள்ள அமேசோனின் “மத்திய தரவு உட்கட்டமைப்பை” தாக்கி அழித்ததாக கூறியது.

அத்துடன், வளைகுடா நாடான பஹ்ரைனில் உள்ள அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளையும் இந்த தாக்குதல் குறிவைத்ததாகவும்  தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பகைமை அதிகரித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஈரானில் கட்டுமானத்தில் உள்ள டார்கோவின் அணு உலை உள்ளிட்ட பொதுமக்கள் உட்கட்டமைப்புகள் மீது வொஷிங்டன் தாக்குதல் நடத்தியதாக தெஹ்ரான் குற்றம் சாட்டியுள்ளது.

எனினும், அமேசோன் அமைப்பு தாக்கப்பட்டதற்கான சுயாதீன உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை, பஹ்ரைன் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் எவரும் IRGCயின் கூற்றுகளை உறுதிப்படுத்தவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here