81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றிக்கொண்டுள்ளதுடன் ஏற்கனவே அவருக்கு இருதடவைகள் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக வௌ்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் Karine Jean Pierre தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, லாஸ் வேகஸ் இல் இடம்பெறவிருந்த ஆதரவாளர்களுடனான சந்திப்பும் பிரசார நடவடிக்கையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் வௌ்ளை மாளிகையின் ஊடக செயலாளர், அமெரிக்க ஜனாதிபதி அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.








