கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர் வெளிநாட்டு ஆசைகாட்டி 47 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி அலுவலர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட  குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அந்த யுவதியை வழிநடத்திய பிரதான குற்றவாளியாக மேற்படி பல்கலைக்கழக ஊழியரே காணப்படுகின்றார்.

குறித்த பெண் மோசடிகள் மூலம் பெறப்பட்ட ஆறு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியை தற்போது கைதாகியுள்ள சந்தேகநபரின் வங்கிக் கணக்கில் செலுத்தியமையும் பொலிஸ் விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here