கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பலாங்கொடை – எல்பிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்பிட்டியவிலிருந்து அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








