எதிர்வரும் தேர்தல் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் தேர்தல் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அனுரகுமார,

உரம் தேவைப்படும் போது ரணில் வீட்டில் இருந்தார்.
எனினும் நாங்கள் விவசாயத்திற்கு பலமான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்.  இந்த தேர்தல், நாட்டை நாம் ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் தேர்தல் ஆகும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here