தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் அவர்கள் நேற்றைய தினம் (14.12.2024) மக்களின் பிரச்சினைகள் குறித்து கிளிநொச்சி, முரசு மூட்டை பகுதியில் மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்பொழுது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாகவும் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுவிதமான விடயங்கள் தொடர்பாகவும்  கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், விவசாயம் கால்நடை வளர்ப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் கடந்த வருடம் இரணைமடு குளத்தின் கீழ் சிறு செய்கையின் போது முரசு மூட்டை பகுதியில் 6000 ஏக்கர் வயல் நிலங்கள் விதைக்கப்படாமல் தரிசு நிலமாகவே காணப்பட்டதாகவும், குளத்தில் போதிய அளவு நீர் இருந்த போதிலும்அதை விடுவிக்காது சில அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பன்னீராயிரம் மெற்றித்தொன் அரிசியை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாகஅதிகாரிகளுடன் கலந்துரையாடி இனிமேல் இப்படியான நடவடிக்கைகள் இடம் பெறாது இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here