அரச நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு காணப்படுவதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவதன் மூலம் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும் மோசடி இடம்பெறுவதாக இலங்கை கணணி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணணி அவசர பதிலளிப்பு பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார்.

பல அரச நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி தொழில் வெற்றிடம் காணப்படுவதாகப் பல விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மக்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட முக்கிய தரவுகளைச் சேகரிக்கும் மோசடி இடம்பெறுவதாக இலங்கை கணணி அவசர பதிலளிப்பு பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here