வடக்கு மாகாண ஆளுநருக்கும், பலாலி மீள்குடியேற்ற சபைக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (05/02/2025) இடம்பெற்றது.

வலி வடக்கு உயர் பாதுகாப்பு நிலையத்திலுள்ள பொது மக்களின் காணிகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பின் வந்த எந்த ஒரு அரசாங்கமும் மக்கள் பயன்படக்கூடிய வகையில் விடுவிக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் போது வலி வடக்கு இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த கணிசமான காணிகள் விடுவிக்கப்பட்டன.
அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் சுமார் 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட போதும் மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையை ஏற்பட்டுள்ளது.
அதாவது மக்கள் தமது கணிகளை சென்று பார்வையிட்டு திரும்புவதற்கு இராணுவம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேர முடியாத சூழ்நிலை தொடர்ந்தும் ஏற்பட்டுள்ளது.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








