இலங்கையில் பூர்வீக  காணி  உரிமை இல்லாத 24 லட்சம் குடும்பங்களுக்கு உரிமப் பத்திரங்கள் வழங்கப்படுவதால், காணிகளின் விலை குறையும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகையில் அரசுக்கு சொந்தமான காணிகளை தனியாருக்கு மாற்றுவதன் ஊடாக இது நாட்டிலேயே மிகப்பெரிய தனியார்மயமாக்கல் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டிலேயே அதிகளவான காணிகளைக் கொண்ட ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணி விவசாய நடவடிக்கைகள், கைத்தொழில்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன.

அத்துடன், மகாவலி மற்றும் ஏனைய அமைச்சுக்களுக்குச் சொந்தமான காணிகளை குறிப்பிட்ட திட்டங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனவே எந்தவொரு இடைத்தரகர் அல்லது அரசியல் உறவும் இல்லாமல் பயனுள்ள திட்டங்களுக்காக காணி வைத்திருக்கும் அமைச்சகங்களுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம், ஒருவர் குத்தகை அடிப்படையில் அரச நிலத்தைப் பெற முடியும்.

இந்நிலையில், முந்தைய வரவு செலவு திட்ட ஆவணத்தில் ஸ்டேஷன் பிளாசா என்ற பெயர் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், காணிகளை மாற்றுவதற்கான யோசனைகள்  ஜூலை 15 ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here