அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள அரச பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் யாரும் மாணவர்கள் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரி காவல்துறை அதிகாரிகளால் சுடப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய சந்தேகநபர் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 20 வயதான நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து மூன்று துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் அந்தப் பிராந்தியத்தின் உயர் காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன் என்று தெரிவிக்கப்படுகிறது.








