அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் அதனுடன் இணைந்த நிறுவனங்களிலும் கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் மங்கள தப்பரேவ தெரிவித்ததாவது, பாதீட்டில் முன்வைக்கப்பட்ட சில முன்மொழிவுகள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் விளைவாக பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடவடிக்கைகள், விரிவுரைகள் மற்றும் மாணவர்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here