அருகம்பே பகுதிக்கு வழங்கப்பட்டிருந்த பயணத்தடையை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நீக்கியுள்ளது.
அருகம்பே பகுதியைத் தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு நேற்று வெளிவிவகார அமைச்சு அமெரிக்கத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து இன்று இந்தப் பயணத்தடையை நீக்கியுள்ளது.








