Wednesday, July 29, 2026
No menu items!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை

யாழில் கோர விபத்து –  குடும்பஸ்தர் பலி..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 8:50 மணியளவில் இடம் பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கல் ஏற்றிவந்த டிப்பர் ஒன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள், டிப்பர் மீது மோதியதில்...

குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்..!

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நேற்றுமுன்தினம் (27/03/2025) இரவு குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 10.00 மணியளவில் குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் அத்துமீறி உள் நுழைந்த அதே பகுதியை சேர்ந்த சிலர் உடமைகளை சேதப்படுத்தியதுடன் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார...

சட்டவிரோதமாக மணல் கடத்தல் – பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்..!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் இருந்து நேற்று (02/03/2025) காலை சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பொலிஸார் குறித்த வாகனத்தை...

அதி தீவிர சிசு பராமரிப்பு பிரிவு ஆளுநரால் திறந்துவைப்பு…!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அதி தீவிர சிசு பராமரிப்பு சிகிச்சை  பிரிவினை வடக்கு மாகாண ஆளுநர் V. வேதநாயகன் இன்று (1/30/2025) திறந்துவைத்தார். இன்று காலை 9:00 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு...

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்..!

பருத்தித்துறை கொட்டடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீதே இந்த வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை (15/1/2025) பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பருத்தித்துறை - கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த ஜெயதீபன் கண்ணன் (வயது 28), விஜயராசா செந்தூரன்...

முடிவுக்கு வராத எலிக்காய்ச்சல் – மேலும் இருவர் உயிரிழப்பு..!

எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் (02.01.2025) இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலே எலிக்காய்ச்சல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என...

அசுர வேகத்தில் பரவும் எலிக்காய்ச்சல் – 121 பேர் பாதிப்பு..!

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6...

மக்களை அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல் – 85 பேர் பாதிப்பு..!

யாழ் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (17.12.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 21 பேரும் யாழ் போதனா வைத்தியசாலயில் 11...

அறிவகம் சனசமூக நிலையத்தின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குருதிக்கொடை…!

யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி வடமேற்கு முருகன் கோவிலடி அறிவகம் சன சமூக நிலையத்தின் 69 ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தான முகாம் ஒன்று நேற்று27/07/2024 ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அறிவகம் சன சமூக நிலைய தலைவர் பிரபாகரன் சரணிகன் தலமையில் நேற்று காலை 9:30 மணியளவில் இடம் பெற்ற இக் குருதிக்கொடை நிகழ்வில் பருத்தித்துறை ஆதார...

15 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 17 வயதான சிறுவன் கைது..!!

யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய  குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17 வயதான சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img