சென்னை விமான நிலையத்திலிருந்து அந்தமான் நோக்கி பயணித்த விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
148 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த விமானமே இவ்வாறு சென்னை விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக ஓடுதளத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து விமானத்தின் தொழிநுட்பக் கோளாறு சரிபார்க்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.







