பார்வையற்றோருக்கான முதலாவது மகளிர் ரி 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு (2025) இந்தியாவில் நடைபெறுகிறது. அண்மையில் பாகிஸ்தானில் நடந்த ஆடவர் பார்வையற்றோர் ரி20 உலகக்கிண்ணத்திலிருந்து பாதுகாப்பு பிரச்சினையால் இந்திய அணி விலகியது.
இதனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.
இதனால் பாகிஸ்தானுக்குரிய ஆட்டங்களை நேபாளம் அல்லது இலங்கையில் நடத்துவது என்று முல்தானில் நடந்த உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.








