ஆடி அமாவாசை விரதமானது பிதாவினை இழந்தவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் உணவுகளை சமைப்பதற்கான கறுப்பு மண்சட்டிகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது

யாழ். திருநெல்வேலி பொதுசந்தைக்கு அருகாமையில்  கறுப்பு மண்சட்டிகள் இன்று விற்பனையாகி வருகின்றது.

ஒரு பெரிய கறுப்பு மண் சட்டியின் விலை 250 ரூபாவில் இருந்து 300 ரூபா விற்பனையாகி வருகின்றது.

ஒரு சிறிய கறுப்புச்சட்டியின் விலை 80 ரூபாவில் இருந்து 100 ரூபா வரை விற்பனையாகிவருகின்றது

திருநெல்வேலி பொதுச்சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மரக்கறிகளையும், கறுப்புச்சட்டியினை  கொள்வனவு செய்து செல்வதை அவதானிக்க முடிந்தது.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here