Exif_JPEG_420

World vision ஒழுங்கமைப்பில்  சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி அனுசரணையில் போஷாக்கு விழிப்புணர்வு பேரணி சாவகச்சேரி நகரில் இடம் பெற்றுள்ளது.

காலை 8:30 மணியளவில் சாவகச்சேரி நகரசபை முன்பிருந்து ஆரம்பித்து சாவகச்சேரி சந்தை பகுதியால் பேரணியாக சென்று ஏ9 வீதி வழியாக மீண்டும் அதே இடத்தை சென்று நிறைவடைந்தது.

இதில் அனைவருக்கும் போஷாக்கு உணவு, இயற்கை உணவு சம உணவு கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் குறித்த பேரணியில் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் நலன்விரும்பிகள் என பலரும் இணைந்திருந்தனர்.

இதில் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் போசாக்கான உணவு, நஞ்சற்ற உணவு சம உணவு தொடர்பான விழிப்புணர்வு நாடகங்களும் நடாத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here