அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் நியமனங்களைக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 3 பொலிஸ் உத்தியோகத்தர்களை கூரிய ஆயுதத்தினால் காயப்படுத்திய நபர் இராணுவ புலனாய்வு அதிகாரி என கூறப்படும் செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர்.
இதன்படி, பொலிஸார் பகிரங்க அறிக்கை மூலம் இதனைத் தெரிவித்ததோடு, கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு (MC) அறிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








